தலைக்கேறிய போதை... நடுரோட்டில் ரகளை.... வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் மகன்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 24, 2022, 10:53 AM IST
தலைக்கேறிய போதை... நடுரோட்டில் ரகளை....  வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் மகன்..!

சுருக்கம்

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருந்தவர் மது குடித்து இருந்ததும், காரினுள் மது நிரப்பப்பட்ட கோப்பை வைக்கப்பட்டு இருந்ததை தினேஷ் பார்த்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மகன் மது போதையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும் இது பற்றிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வைரல் வீடியோவின் படி, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஹகுமா கரடாவின் மகன் ரோஹிதாப் சிங் மது போதையில் காரினுள் அமர்ந்த படி முன்னே இருந்த கார் மீது மோதி விபத்து ஏற்டுத்தியதோடு, அந்த காரில் இருந்த வியாபிரியுடன் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோ காட்சிகளில் ரோஹிதாப் சிங் காரினுள் மது ஊற்றப்பட்ட கிளாஸ் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அவர் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்துள்ளார் என்றே தெரிகிறது.

மது போதையில் ரகளை:

கடந்த சனிக்கிழமை இரவு வியாபாரியான தினேஷ் அஹுஜா (40) தனது ஊழியருடன் இந்தூரில் இருந்து போபால் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் இவர்களின் காரை பயங்கரமாக மோதி இருக்கிறது. மேலும் காரை மோதியதுடன் அந்த காரில் இருந்தவர்கள் தினேஷ் உடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் சென்று பார்த்த போது ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருந்தவர் மது குடித்து இருந்ததும், காரினுள் மது நிரப்பப்பட்ட கோப்பை வைக்கப்பட்டு இருந்ததை தினேஷ் பார்த்துள்ளார்.

ஒருகட்டத்தில் காரில் இருந்தவர் கையில் கத்தியுடன் ஓடி வந்துள்ளார். மேலும் தினேஷின் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதை அடுத்து தினேஷ் ரோஹிதாப்பை அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுள்ளார். உடனே காரினுள் ஏறிய ரோஹிஜதாப் காரை வேகமாக எடுத்து, மீண்டும் தினேஷ் கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி செல்கிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!