சரக்கு லாரியும்-தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..! 9 பேர் துடி துடித்து பலி

By Ajmal KhanFirst Published May 24, 2022, 10:47 AM IST
Highlights

புனே- பெங்களூர் சாலையில் சரக்கு லாரியும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி- பேருந்து விபத்து

சாலை விபத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அந்தவகையில் புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹூப்பாலி- தார்வார்  பகுதி மேம்பாலத்தில் தனியார் பேருந்தும்- சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கோலாக்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும் எதிர் புறம் வந்த லாரியும் மோதியது. இதில்  லாரி ஓட்டுநர், கிளினர். பேருந்து ஓட்டுநர் பயணி என 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

9 பேர் உயிரிழந்த பரிதாபம்

மேலும் விபத்தில் சிக்கிய 26 பேர் கிம்ஸ் மருத்துவமனனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் 3  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் கார்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விபத்திற்கு கர்நாடக முதலமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில்  தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதே போன்று சம்பவம் மீண்டும் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும்  அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பகுதியில்  உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கோவிலுக்கு சென்று ஊர் திரும்பிய போது பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு.!

 

click me!