விடாது பெய்யும் கனமழை.. மிரட்டும் சூறாவளி காற்று.. டெல்லி - சென்னை இடையே 4 விமானங்கள் ரத்து..

By Thanalakshmi VFirst Published May 23, 2022, 3:56 PM IST
Highlights

மோசமான வானிலை காரணமாக டெல்லி - சென்னை இடையே இன்று நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. 
 

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 50 கி.மீ வரை வேகத்துடன் பலத்த காற்று வீசி வருகிறது. இதனிடையே மோசமான வானிலை காரணமாக, இன்று அதிகாலை முதலே டெல்லிக்கு செல்லவிருந்த விமானங்கள் வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதனிடயே கனமழை தொடந்து வருவதால், தில்லியிலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும் சிக்கல் நீடித்து வருகின்றது.  இந்நிலையில் சென்னை - டெல்லி இடையே நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையிலிருந்து இன்று மாலை 3.10, 5.15 க்கும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் டெல்லியிலிருந்து மாலை 4, நள்ளிரவு 12.15க்கு வரவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தில்லியிலிருந்து சென்னைக்கு வரும் 5 விமானங்களும், சென்னையிலிருந்து தில்லி செல்லும் 6 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

மேலும் படிக்க: இந்தி மொழியில் வரவேற்பு... சிறுவனிடம் வியந்து பேசிய பிரமதர் மோடி... டோக்கியோவில் நெகிழ்ச்சி..!

click me!