
Tarun Vijay meets Nirmala Sitharaman: பாஜக முன்னாள் எம்.பி.யும் உத்தரகண்ட் போர் நினைவுச்சின்னத் தலைவருமான தருண் விஜய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து பேசினார். நிர்மலா சீதாராமனின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சித்திர வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட 'வாரியர் டெமாக்ரடிக் என்ற காபி'புத்தகத்தை நிர்மலா சீதாராமனுக்கு தருண் விஜய் பரிசாக வழங்கினார்.
நிர்மலா சீதாராமனுக்கு நன்றி
மேலும் இந்த சந்திப்பின்போது எல்லை மாநிலங்களின் வளர்ச்சி குறித்து நிதி அமைச்சருடன் ஒரு சுருக்கமான கலந்துரையாடலையும் அவர் நடத்தினார். மேலும் மத்திய பட்ஜெட்டில் உத்தரகண்டின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தியதற்காக நிர்மலா சீதாராமனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஒருபக்கம் இந்திக்கு ஆதரவு! மறுபக்கம் தமிழர்களை புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு நாயுடு!
தொடர்ர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தருண் விஜய், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறந்த மேம்பாட்டுத் திட்டங்களை உத்தரகாண்ட் மக்களுக்கு வழங்கி மாநில வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான முதல்வராக இருக்கும் முதலமைச்சர் ஸபுஷ்கர் சிங் தாமியின் இடைவிடாத முயற்சிகளை தருண் விஜய் பாராட்டினார்.
உத்தரகாண்ட் இமயமலையை வழிநடத்தப்போகிறது
''இன்னும் சில ஆண்டுகளில், கல்வி நிறுவனங்கள், அனைத்து வானிலை சுற்றுலா, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் அதிக தனிநபர் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றில் உத்தரகாண்ட் மாநிலம் முழு இமயமலைப் பகுதியையும் வழிநடத்தப் போகிறது'' என்று தருண் விஜய் பெருமையுடன் தெரிவித்தார்.
யார் இந்த தருண் விஜய்?
69 வயதான தருண் விஜய், பாஜகவின் மூத்த தலைவராக விளங்கி வருகிறார். ஒரு அரசியல்வாதியாக மட்டுமின்றி பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சேவகர் என பன்முக முகம் கொண்டவர். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட தருண் விஜய் 'தெய்வப் புலவர்' திருவள்ளுவரை பலமுறை புகழந்து பேசியுள்ளார். திருக்குறளை நாடு முழுவதும் அறியச் செய்ய பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார்.
சர்ச்சையில் சிக்கினார்
ஆனால் இதே தருண் விஜய், கடந்த 2017ம் ஆண்டு தமிழ்ர்கள் உள்ளிட தென்னிந்தியர்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். அதாவது வடமாநிலத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சிலர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதால் இனவெறி சர்ச்சை எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த தருண் விஜய், ''நாங்கள் இனவெறியுடன் இருந்தால் ஏன் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழப் போகிறோம்'' என்று சர்ச்சையாக பேசினார். பின்பு தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Ranya Rao: தங்கக் கடத்தல் 'ராணி' நடிகை ரன்யா ராவின் கணவர் இவரா? பரபரப்பு தகவல்!