உணவுப் பாதுகாப்புச் சட்டம் இன்று முதல் அமல் : ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு எவ்வளவு அரிசி?

 
Published : Nov 01, 2016, 11:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
உணவுப் பாதுகாப்புச் சட்டம் இன்று முதல் அமல் : ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு எவ்வளவு அரிசி?

சுருக்கம்

தமிழகத்தில் இன்று முதல் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப் பட உள்ளதால், ரேஷன் கடைகளில்  கிடைக்கும் அரிசியின் அளவைப் பார்ப்போம்..

ஒரு உறுப்பினரைக் கொண்ட குடும்ப அட்டைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 12 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 5 கிலோ மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அளவிலேயே அரிசி இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல், 2, 3 மற்றும் 4 உறுப்பினர்களைக் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அளவிலேயே அரிசி வழங்கப்படும்.  

 

5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப அட்டைக்கு 20 கிலோவில் இருந்து 25 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். 6 உறுப்பினர்களுக்கு 30 கிலோவும், 7 உறுப்பினர்களுக்கு 35 கிலோவும் அரிசி வழங்கப்பட இருக்கிறது. 10 உறுப்பினர்களுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தூக்கத்தில் மலம் கழித்த 3 வயது குழந்தை கொலை.. தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல..! மோகன் பகவத் நெகிழ்ச்சி பேச்சு!