வெள்ள நிவாரணத்திற்காக மதுபான விலை அதிரடி உயர்வு!

By vinoth kumarFirst Published Aug 17, 2018, 4:56 PM IST
Highlights

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை சரி செய்ய மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை சரி செய்ய மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக 35 அணைகள் நிரம்பியுள்ளன. மாநில முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். மீட்கும் பணியில்  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக 1,067 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் விதமாக நிவாரணப் பணிக்காக 100 நாட்களுக்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் தாமஸ் ஐசக் டுவிட்டர் பக்கத்தில் வெள்ள பாதிப்பை சரி செய்ய நிவாரணத் தொகை குறைவாக உள்ளது. ஆகையால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க விதமாக 100 நாட்களுக்கு மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்படுகிறது. கலால் வரி உயர்வால் 250 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

click me!