கொட்டித் தீர்க்கும் கனமழை…. நடு ரோடில் பெரும் பிளவு !! தமிழக – கேரள எல்லையில் அதிர்ச்சி…

By Selvanayagam PFirst Published Aug 17, 2018, 4:48 PM IST
Highlights

கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் முக்கிய சாலை நடுவே 100 மீட்டர் தூரத்திற்கு பெரும் பிளவும்,  இரண்டு அடிக்கு மேல் சாலையில் பள்ளமும் ஏற்பட்டுள்ளதால் தமிழக- கேரள மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிப்பு. தொடர்ந்து  பிளவு பெரிதாகி  வருவதால் அந்த சாலை வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகிளல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாடுகானி மற்றும் தேவாலாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்ல கூடிய முக்கிய சாலையான கீழ்நாடுகாணி சாலையில் ரோடின் குறுக்கே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிளவு  சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இரண்டு அடிக்கும் கீழே இறங்கி உள்ளதால் இந்த வழியாக செல்லக்கூடிய அனைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பிளவு அதிகமாக வருவதால் இரு மாநில முக்கிய சாலை  ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய அனைத்துலக கனரக வாகனங்களும் கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டது

இந்த நிலையில் தற்போது கூடலூரில் இருந்து கேரளா செல்லக்கூடிய முக்கிய சாலையான நாடுகாணி பகுதியில் சாலையில்  பிளவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளவு அதிகமாகி கொண்டு வருவதால் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதித்துள்ளனர். ஆபத்து ஏதும் நிகழாமல் இருக்க அனைத்து துறை அதிகாரிளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

click me!