
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதனை அனைத்து மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தங்கள் வாகனங்களில் இருந்த சிவப்பு விளக்கை அகற்றினர்.
வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்தக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முதலில் ஏற்க மறுத்தார்.
மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி, அரசு அதிகாரிகள் தங்கள் வானகங்களில் சிவப்பு விளக்கிற்கு பதிலாக கொடிகளை பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் செவ்வக வடிவ கொடியை பயன்படுத்த மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
செயலாளர் உள்ள அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், வால் போன்று வெட்டப்பட்ட கொடிகளை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கமிஷனர்கள் ஆகியோர் முக்கோண வடிவ கொடியை பயன்படுத்தலாம் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.