Exit poll results 2023: மத்தியப் பிரதேச எக்ஸிட்போல் முடிவுகள்: ஆட்சியைப் பிடிக்கப்போது யார்?

By SG Balan  |  First Published Nov 30, 2023, 6:02 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி காணப்படும் இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகின்றன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்த வந்த உடனே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு ஆகும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை மதிப்பிடுவதற்கு எக்ஸிட்போல் முடிவுகள் முக்கியக் கருவியாகக் கருதப்படுகிறது.

Latest Videos

undefined

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி காணப்படும் இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

போல்ஸ்டார்ட் கணிப்பு

பாஜக 106-116

காங்கிரஸ் 111-121

மற்றவை 0-6

ஜன் கி பாத் கணிப்பு

காங்கிரஸ் 111-121

பாஜக 118-130

மற்றவை 5

ஆக்சிஸ் இந்தியா கணிப்பு

காங்கிரஸ் 111-121

பாஜக 118-130

மற்றவர்கள் - 5

மேட்ரிஸ் கணிப்பு

பாஜக 118-130

காங்கிரஸ் 97-107

மற்றவை 0

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

ஐந்து சட்டமன்றத் தேர்தல்களுக்கும் டிசம்பர் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக ஐந்து மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம்தேதி தேர்தல் நடந்தது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தத் தேர்தல்கள் நடப்பதால், இந்தத் தேர்தல்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன.

click me!