நீங்க நினைக்கிறதவிட நாங்க ரொம்பக் கெட்டவங்க... 1971-க்கு பின் 50KM உள்ளே தில்லா நுழைந்த இந்திய விமானப்படை!!

By sathish kFirst Published Feb 26, 2019, 2:21 PM IST
Highlights

தரைவழித்தாக்குலை விட விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது அதிபயங்கரமானது, எதிரிநாட்டின் ரேடாரில் சிக்காமல் விமானத்தை செலுத்தி, ஊடுருவ வேண்டும் என்பது பைலட்டுகளுக்கு சவாலான ஒன்று, ஆனால் அதையே அசாட்டாக அடித்து துவம்சம் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் இந்திய ரியல் ஹீரோக்கள்.

தரைவழித்தாக்குலை விட விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது அதிபயங்கரமானது, எதிரிநாட்டின் ரேடாரில் சிக்காமல் விமானத்தை செலுத்தி, ஊடுருவ வேண்டும் என்பது பைலட்டுகளுக்கு சவாலான ஒன்று, ஆனால் அதையே அசாட்டாக அடித்து துவம்சம் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் இந்திய ரியல் ஹீரோக்கள்.

கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது கூட பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லாத இந்திய விமானப்படை தற்போது உள்ளே சென்று தாறுமாறான சம்பவத்தை நிகழ்த்தி தரைமட்டமாக ஆக்கிவிட்டு வந்திருக்கிறது. 

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தோல்வியே வீரர்கள் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தத நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை 3.30மணிக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது இந்திய இராணுவம் விமானப்படை தாக்குதல். சுமார் 1000கிலோ வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியுள்ளது இந்திய இராணுவம். இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர், “இன்று காலை எல்லையிலிருந்து 3 மைல் தொலைவில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் அதனை விரட்டி அடித்தன.அந்த நேரத்தில் வெடிகுண்டுகளை திறந்த வெளியில் இந்தியப்படைகள் வீசியுள்ளது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் F16 ரக போர் விமானங்கள் , இந்திய விமானப்படை மிராஜ்2000 ரக போர் விமானங்களை தாக்க முயற்சி முயற்சித்தும், இந்திய போர்ப்படை விமானங்களில் தாக்குதலால் பின்வாங்கி இருக்கிறது.

புல்வாமா தாக்குதல் நடந்து 12 நாட்களுக்குப்பிறகு இந்திய விமானப்படை தனது அதிரடியை காட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலைமையில் அவசரக்கூட்டம் நடந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த உரி தாக்குதலை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலின் போது இந்திய ராணுவம் தரை வழியாக பாகிஸ்தானில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. அப்போது, இலகுரக ஹெலிகாப்டர்கள் தான் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இன்றைய தாக்குதலில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயமாகும். தரைவழித்தாக்குலை விட விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது மிகுந்த ஆபத்து நிறைந்தது. எதிரிநாட்டின் ரேடாரில் சிக்காத வண்ணம் விமானத்தை செலுத்தி, ஊடுருவ வேண்டும் என்பது பைலட்டுகளுக்கு சவாலான ஒன்றாகும். கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இரு நாட்டு போரின் போது கடைசியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அது ஏன் 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது கூட பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவாத இந்திய விமானப்படை தற்போது 50KM எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அவர்களது மிக பெரிய பயிற்சி தளம் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை" என  இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார்.  மேலும் இன்று அதிகாலை அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதல் பிரதமர் மோடியின் கண்காணிப்பில் நடந்ததாகவும், மேலும் இந்த திட்டத்திற்கான ப்ளூ பிரிண்ட் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் 3 முக்கிய அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது எனவும் ரிபப்லிக் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

click me!