முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம்: சீருடை உத்தரவை ரத்து செய்த மைசூரு கல்லூரி

Published : Feb 19, 2022, 01:07 PM IST
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம்: சீருடை உத்தரவை ரத்து செய்த மைசூரு கல்லூரி

சுருக்கம்

கர்நாடகாவில் எந்த கல்லூரியின் வகுப்பறையிலும் மாணவர்கள் மத அடையாளங்களைக் கொண்ட துணிகளை அணிந்து வருவதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கான சீருடை விதியை ரத்து செய்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதியளித்துள்ளது.

கர்நாடகாவில் எந்த கல்லூரியின் வகுப்பறையிலும் மாணவர்கள் மத அடையாளங்களைக் கொண்ட துணிகளை அணிந்து வருவதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கான சீருடை விதியை ரத்து செய்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதியளித்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை கடந்த சில வாரங்களாக பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் முதல்முறையாக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மைசூரு கல்லூரி அனுமதித்துள்ளது.

மைசூரு நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தனியார் கல்லூரி இந்த முடிவை எடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதியளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிராக சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அதற்கு மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அடுத்தடுத்த நகரங்களில் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. 

இதனால், கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ரம், “ வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கிடையே, தும்கூருவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்து போராட்டம் நடத்தியதற்காகவும், 144 தடை உத்தரவை மீறியதற்காகவும் 20 மாணவர்கள் மீது போலீஸார் முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர்.கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கும், வகுப்புகளுக்கும் செல்ல நீதிமன்றம் அனுமதிக்காத நிலையில், மைசூருவில் உள்ள ஒருகல்லூரி அனுமதித்துள்ளது.

மைசூருவில் உள்ள ப்ரீ யுனிவர்சட்டி துணை இயக்குநர் டி.கே. ஸ்ரீனிவாஸ் கூறுகையில் “ 4 மாணவிகள் ஹிஜாப் அணியாமல் வகுப்புகளுக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த மாணவிகளுக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

இதுகேள்விப்பட்டு நான் கல்லூரிக்கு சென்று ஆலோசனை நடத்தினேன். இதன் முடிவில் மாணவர்களுக்கான சீருடைவிதியை ரத்து செய்யப்பட்டது, மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!