லண்டன் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிசூடு விவகாரம் - 3 பேர் பலி, 8 தீவிரவாதிகள் கைது...

 
Published : Mar 23, 2017, 06:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
லண்டன் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிசூடு விவகாரம் - 3 பேர் பலி, 8 தீவிரவாதிகள் கைது...

சுருக்கம்

Fire the issue in Parliament in London - 3 killed 8 terrorists arrested

லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாகவும் பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற லண்டன் நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதில் பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 200 எம்பிக்களும் கட்டிடத்திற்கு உள்ளேயே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டை அடுத்து லண்டன் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.

வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே அரண்மனை மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த தீவிரவாதிகள் 8 பேரை கைது செய்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்