பீகாரில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிச்சூடு!

Asianet News Tamil  
Published : Sep 07, 2017, 06:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
பீகாரில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிச்சூடு!

சுருக்கம்

Fire on journalist in Bihar

பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகை செய்தியாளர் கௌரி லங்கேஷை தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த பத்திரிகை செய்தியாளர் பங்கஜ் மிஸ்ரா என்பவரை மர்ம நபர்கள் இன்று துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பீகாரில் அர்வால் நகரில் ராஷ்ட்டீரிய சஹார என்ற பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரிகையில், பங்கஜ் மிஸ்ரா என்பவர் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் வழக்கம்போல் இன்று பணி செய்து கொண்டிருந்த போது, அவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பங்கஜ் மிஸ்ரா, பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த பங்கஜ் மிஸ்ரா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். பங்கஜ் மிஸ்ராவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பங்கஜ் மிஸ்ரா, வங்கியில் இருந்து கொண்டு வந்த ரூ.1 லட்சம் பணத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்றனர்.

பங்கஜ் மிஸ்ரா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. புதிய முதலமைச்சர் யார் தெரியுமா? முழு விவரம்!
SIR: வழக்கறிஞராக மாறிய முதல்வர்.. உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி நேரடி வாதம்.. வியந்த நீதிபதிகள்!