
Fire Breaks Out Near MahaKumbh Mela 2025 : மகா கும்பமேளா 2025: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாக நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் தை அமாவாசை நாளில் புனித நீராட பிரயாக்ராஜிற்கு அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் கூடியிருந்த நிலையில் கடும் நெரிசல் எற்பட்டது. அதுமட்டுமல்லாமல் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் பலர் உயிரிழந்தனர். அதோடு பலரும் காயமடைந்தனர்.
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி கும்பமேளா அரங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீயை அணைக்க விரைந்து செயல்பட்டனர். இதனால் அந்த விபத்திலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்குள் இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்றது.
மகாகும்பமேளாவுக்குச் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வந்ததால், நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது மீண்டும் ஒரு தீ விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்!
வெள்ளிக்கிழமை மகா கும்பமேளா க்ஷேத்திரத்தின் 18வது பிரிவு, சங்கராச்சாரியா மார்க்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை மற்றும் அதிகாரிகள் சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருகின்றனர்.
பல மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது..." என்று எஸ்பி நகர சர்வேஷ் குமார் மிஸ்ரா, செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது. இதுவரையில் கிட்டத்தட்ட 40 கோடிக்கும் அதிகமானோர் சங்கமத்தில் நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமத்தில், சாதுக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி இன்று காலை வரை மகா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகா கும்பமேளா சங்கமத்தில் நீராடி ஒற்றுமை செய்தியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி!