sanjay raut news: பிடி இறுகுகிறது! சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் புதிய வழக்கு

By Pothy Raj  |  First Published Aug 1, 2022, 9:19 AM IST

சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் பெண்ணை அவதூறாகப் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.


சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் பெண்ணை அவதூறாகப் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்ட சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், சாட்சியாக இருந்த பெண் அளித்த புகாரில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

குரங்கு அம்மைக்கு கேரளாவை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு… இந்தியாவில் பதிவானது முதல் மரணம்!!

மும்பையில் உள்ள வகோலா போலீஸ் நிலையத்தில்தான் ஸ்வப்னா பட்கர் அளித்த புகாரின் அடிப்படையில் சஞ்சய் ராவத் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்கர் சமீபத்தில் போலீஸில் அளித்த புகாரில், தனக்கு பாலியல் மிரட்டல்மற்றும் கொலை மிரட்டல் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு, செய்தித்தாளில் வைக்கப்பட்டு கடந்த ஜூலை 15ம் தேதி வந்ததாகத் தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமல்லாமல் ஆடியோ கிளிப் ஒன்றில் ஆண் ஒருவரின் குரல், மிரட்டல் தொணியில் அவதூறாகப் பேசுவது போன்று இருந்தது, இந்த ஆடியோ வைரலானது.

மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்

இதையடுத்து கடந்த சனிக்கிழமை வகோலா போலீஸார், சஞ்சய் ராவத் மீது ஐபிசி 507 பிரிவில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். தனக்கு மிரட்டல், உயிருக்கு ஆபத்து இருப்பதாக பட்கர் கூறி, பாதுகாப்பு கோரி போலீஸாரிடம் மனு அளித்துள்ளார். 

முன்னதாக சஞ்சய் ராவத் இல்லத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் ரெய்டு நடத்தி அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, இன்று அதிகாலை சஞ்சய் ராவத்தை முறைப்படி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

உயிர்பெற்ற சதுரங்கக் காய்கள்… புதுக்கோட்டை ஆட்சியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!!

சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததையடுத்து, அவரை அமலாக்ககப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்ததனர். ஏறக்குறைய 6மணிநேரம் விசாரணை நடத்தினர். சஞ்சய் ராவத்தை இன்று காலை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தி காவல் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

click me!