இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்..! வரிச்சலுகைக்கு வாய்ப்பு..?

By Manikandan S R SFirst Published Feb 1, 2020, 7:49 AM IST
Highlights

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். அதே போல நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
 

மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். அதே போல நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நெருக்கடியான கால கட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் மக்களிடையே  எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. வரிச்சலுகை வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்கள் வந்துள்ளன. அதே போல தொழில் துறைகளை மீட்டெடுக்கும் வகையில் அறிவிப்புகள் வருமா என தொழில் துறையினரும் ஆவலுடன் பட்ஜெட்டை எதிர் நோக்கி இருக்கின்றனர். மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய ரெயில்கள், புதிய வழித்தடங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் ரயில்கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்தது. கடந்த 2017 ஆண்டு இந்த நடைமுறையை பிரதமர் மோடி மாற்றினார். அது முதல் பிப்ரவரி 1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!