
இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள், கொண்டாடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும் எனக்கூறி அல்கொய்தா தீவிரவாத அமைப்பின், ஆசியப்பிரிவு வீடியோ வெளியிட்டுள்ளது.
‘இந்து தீவிரவாதம்’ என்று தலைப்பில் அல்கொய்தா அமைப்பு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் குறிப்பிடப்புள்ள பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பாகவும், இந்துக்களை குறிவைத்தும் கூறப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்து வழிபாட்டு தலங்களையும், பண்டிகைகளின்போதும் தாக்குதல் நடத்தி மதரீதியான பிளவை உண்டாக்க அல்கொய்தா திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, உத்தப்பிரதேசத்தைச் சேர்ந்த அல்கொய்தா ‘ஸ்லீப்பர் செல்’ சனாவுல் ஹக் அவரின் கூட்டாளிகளின் நடமாட்டத்தை புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வரும் புலனாய்வு பிரிவினர், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இதுபோன்ற ஒரு வீடியோவை பரப்பினர். அதில் சபரிமலை கோயில், திருச்சூர் பூரம், கும்பமேளா திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து,சபரிமலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இதுவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் ‘டெலிகிராம்’ மெசஞ்சர் மூலம் 50 செய்திகளை மலையாளத்தில் அனுப்பியுள்ளதாக ேகரள போலீசார் கூறுகின்றனர். கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ரஷிக் அப்துல்லா என்ற இளைஞர் சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார். இவர் அனுப்பிய வீடியோவில் இந்துக்கள், இந்து வழிபாட்டு தலங்கள், இந்து பண்டிகைகளின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.