குனோ தேசியப் பூங்காவில் இன்னொரு சிறுத்தை பலி... 5 மாதத்தில் 9வது சிறுத்தை உயிரிழப்பு

Published : Aug 02, 2023, 02:45 PM ISTUpdated : Aug 02, 2023, 02:57 PM IST
குனோ தேசியப் பூங்காவில் இன்னொரு சிறுத்தை பலி... 5 மாதத்தில் 9வது சிறுத்தை உயிரிழப்பு

சுருக்கம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் கடந்த மாதத்தில் 4 நாட்களில் இரண்டு ஆண் சிறுத்தைகள் உயிரிழந்தன.

குனோ தேசிய பூங்காவில் இன்று காலை மற்றொரு சிறுத்தை இறந்ததை அடுத்து அங்கு கடந்த ஐந்து மாதங்களில் பலியான சிறுத்தைகளில் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

"தாத்ரி என்ற பெண் சிறுத்தை இன்று காலை இறந்து கிடந்தது. இறப்பிற்கான காரணத்தை அறிய, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது" என்று பூங்கா அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 14 சிறுத்தைகள் (ஏழு ஆண் சிறுத்தைகள், ஆறு பெண் சிறுத்தைகள் மற்றும் ஒரு பெண் சிறுத்தைக் குட்டி) ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்: குடியரசுத் தலைவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை

குனோ தேசிய பூங்காவின் வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் நமீபிய நிபுணரால் அவற்றின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண் சிறுத்தைகள் திறந்த வெளியில் இருந்தன. அவற்றில் ஒன்று இறந்து கிடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் இறந்த ஒன்பது சிறுத்தைகளில் மூன்று குட்டிகளும் அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பரில், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. அவை அங்கு நான்கு குட்டிகளை ஈன்றுள்ளன.

9வது சிறுத்தை இறந்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட மத்திய அரசின் சிறுத்தைகள் மறுவாழ்வுத் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் நான்கு நாட்களில் இரண்டு ஆண் சிறுத்தைகள் இறந்துவிட்டன. தேஜஸ் என்ற சிறுத்தை ஜூலை 11 அன்று இறந்தது. சூரஜ் என்ற சிறுத்தை ஜூலை 14 அன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. தேஜாஸ் சிறுத்தை ஒரு பெண் சிறுத்தையுடன் நடந்த சண்டையால் இறந்துபோனது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தாயே குழந்தைகள் மீது வெந்நீரைக் கொட்டிய கொடுமை! சிங்கப்பூர் பெண்ணின் கொடூரச் செயல்!

மார்ச் 27 அன்று, சாஷா என்ற பெண் சிறுத்தை சிறுநீரகக் கோளாறால் இறந்தது. ஆண் சிறுத்தையான உதய் இதய-நுரையீரல் செயலிழப்பால் ஏப்ரல் 23 அன்று இறந்தது. தக்ஷா என்ற பெண் சிறுத்தை மே 9 அன்று மற்றொரு ஆண் சிறுத்தையோடு சண்டையிட்டு இறந்தது. மே 25 அன்று இரண்டு சிறுத்தை குட்டிகள் அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தன. மே 23 அன்று மற்றொரு குட்டி இறந்தது.

சில வல்லுநர்கள் சிறுத்தைகளில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற ரேடியோ காலர்களால் இறப்பிற்கு காரணம் என்று கூறியுள்ளனர். ஆனால், அரசு அவை ஆதாரம் இல்லாத ஊகங்கள் என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. கடந்த ஜூலை 14 அன்று இறந்த சூரஜ் என்ற சிறுத்தையின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் புழுக்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசாங்கம் பராமரிப்பில் எந்த குறைபாடும் இல்லை என மறுக்கிறது.

எக்கசக்க தள்ளுபடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆகஸ்ட் 15 வரை ஓலா வழங்கும் சூப்பர் சலுகை!

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!