‘செல்போன்’ வாங்க பெற்ற மகனை விற்ற ‘பாசக்கார தந்தை’!

First Published Sep 13, 2017, 3:06 PM IST
Highlights
Father who sold his son to buy cellphone


ஓடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 11 மாத மகனை விற்று அந்த பணத்தில் செல்போனும், மீத பணத்துக்குமதுவும் வாங்கி குடித்துள்ள கொடுமையாக சம்பவம் நடந்துள்ளது. 

பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  பல்ராம் முகி. இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். சமீபத்தில் 3-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இப்போது 11 மாதம் ஆகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பல்ராம் முகி தனது 11 மாத மகனை தூக்கிக்கொண்டு வௌியே சென்றவர் அந்த குழந்தையை ரூ.23 ஆயிரத்துக்கு  ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தில் ரூ.1,500க்கு ஒரு செல்போனும், தனது 7 வயது மகளுக்குசிறிய வௌ்ளிக் கொலுசும் வாங்கியுள்ளார். மீத முள்ள பணத்துக்குமது குடித்துள்ளார். 

இது குறித்து முகியின் மனைவி சுக்தி  அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல்ராம் முகியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து பத்ரக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுப் சஹூகூறியதாவது- 

பல்ராம் சுகி துப்புரவு பணியாளராக இருந்து வருகிறார். இவருக்குநிலையான வருமானம் இல்லை எனத் தெரிகிறது. இதனால், தனது மைத்துனர் பலியா, அங்கன்வாடியில் பணியாற்றிவரும் ஒருவர் ஆகியவருடன் சேர்ந்து தனது 11 மாத குழந்தையை பல்ராம்விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த குழந்தையை இவர்கள் ஒரு தம்பதியிடம் விற்பனைச் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், ஓய்வு பெற்ற அரசு டிரைவர் சோம்நாத் சேத்தி என்பவரின் 24-வயது மகன் கடந்த 2012ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால், அவரின் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரை இயல்புநிலைக்கு கொண்டுவர இந்த குழந்தையை அங்கன்வாடியில்  பணியாற்றிய ஒருவர், பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தம்பதிகளிடமும் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!