பாஜகவுக்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு!

By Asianet TamilFirst Published Jan 28, 2019, 4:35 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். 

கடந்த 2013ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் நிதி இழப்பைச் சமாளிக்க ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற தவறியதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். 

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவும் சந்திரபாபு திட்டமிட்டார். ஆனால், ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. ஆந்திராவிலிருந்து வரும் கருத்துக்கணிப்புகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த முறை வெற்றிபெறும் என கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தனக்கான ஆதரவை பெருக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்திருக்கிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான பிப்ரபரி 13ஆம் தேதி இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. அன்றைய தினம் மோடி அரசு செய்த நம்பிக்கை துரோகம் பற்றி பேசவும் சந்திரபாபு திட்டமிட்டுள்ளார். ஆந்திராவில் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட சந்திரபாபு,  மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியாகப் போராட்டத்தை முன்னெடுப்பதாக பாஜக விமர்சனம் செய்துள்ளது.

click me!