நல்ல படங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும்! அது இப்போ நிரூபணமாகியிருக்கு! பூரிக்கும் 'பத்மாவத்' கதாநாயகன்!

 
Published : Feb 03, 2018, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
நல்ல படங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும்! அது இப்போ நிரூபணமாகியிருக்கு! பூரிக்கும் 'பத்மாவத்' கதாநாயகன்!

சுருக்கம்

Fans will support good films actor Shahid Kapoor

நல்ல படங்களை நாடு எப்போது ஆதரிக்கும் என்றும், இது மீண்டும் ஒரு முறை பத்மாவத் விஷயத்தில் நிரூபணமாகி உள்ளது என்றும் நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

பத்மாவத் திரைப்படம் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியாகியது. வெளியான மூன்று தினங்களிலேயே ரூ.50 கோடிக்குமேல் வசூலில் வாரி குவித்து வருகிறது. அது மட்டுமல்லாது, பத்மாவதி படத்தில் ராணி பத்மினியாக நடித்த தீபிகா படுகோனோ, நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங்குக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து, பத்மாவத் படத்தில் கதாநாயகனாக நடித்த ஷாகித் கபூர் கூறும்போது, ‘பத்மாவத்’ படம் நீண்ட நாட்களாக சர்ச்சையில் சிக்கியதால், படக்குழுவினர் அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைய விஷயங்களை சகித்து கொள்ள வேண்டி இருந்தது.

அதேபோல் நிறைய விஷயங்களை இழக்கவும் செய்தோம். நிறைய தியாகங்கள் செய்ய நேர்ந்தது. மேலும், உணர்வுகளை மனதில் அடக்கி வைத்து கொள்ள பழகி கொண்டோம் என்றார்.

குறிப்பாக அரசியல் ரீதியாக நாங்கள் சரியாக இருக்க நேர்ந்தது. இந்த படம் ஏராளமான தடைகளை கடந்து வெளியானது. இன்றைக்கு நாங்கள் சரியானவர்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக உணர்கிறோம். 

படம் வெளியான இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல படங்களுக்கு நாடு எப்போதும் ஆதரவு அளிக்கும். இது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இந்த அன்பும், ஆதரவும் நான் எதிர்பார்த்ததை விட அதிகம் என்றும் நடிகர் ஷாகித் கபூர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி