3 மாத குழந்தையின் தலை வெட்டி சந்திரகிரகணத்துக்காக நரபலி!? ஆந்திராவையே அலறவிட்ட சம்பவம்...

 
Published : Feb 02, 2018, 09:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
3 மாத குழந்தையின் தலை வெட்டி சந்திரகிரகணத்துக்காக நரபலி!? ஆந்திராவையே அலறவிட்ட சம்பவம்...

சுருக்கம்

3-month-old baby head on the terrace

அபூர் சந்திர கிரகணம் தோன்றிய நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத கைக் குழந்தையின் தலை வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் அபூர் சந்திர கிரகணம் தோன்றியது. சூப்பர் மூன், பிளட்டட் மூன், ப்ளு மூன் ஆகிய மூன்றும் ஒரே நாளில் தோன்றியது. இது 152 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய நிகழ்வு என்பதாம்  இதை நாடு முழுவதும் கொட்டும் பணியிலும் மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில் இந்த அபூர்வ சந்திர கிரகணம் தோன்றும் நேரத்தில் ஆந்திராவில் பயங்கர கொடூரம் ஒன்று சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.



ஹைதராபாத்தை அடுத்த சில்கனகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத கைக்குழந்தை ஒன்று நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசார் அந்த குழந்தையின் தலையை மட்டும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தையின் உடலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தலை துண்டிக்கப்பட்டு பளிகொடுக்கபட்ட  குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பது இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தையின் தலை கத்தியால் துண்டிக்கப்பட்டு பளிகொடுத்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். பளிகொடுக்கபட்ட பிஞ்சுவின் தாய் தந்தை யார், அது எந்த பகுதியை சேர்ந்த குழந்தை என்ற எந்த தகவலும் தெரியாமல் திணறி வருகின்றனர்.

அபூர்வ சந்திர கிரகணத்திற்கு மறுநாள் குழந்தையின் தலை மட்டும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தனியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அமானுஷ்ய சக்தியை பெற மந்திரவாதிகள் யாரேனும் இப்படி செய்திருக்கலாம். அல்லது கிரகணத்தின் போது குழந்தையை பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற ஆசைக்காக இப்படி செய்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.



குழந்தையை கொன்றவர்கள் யார்? இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ரச்சகொண்டா போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொல்லப்பட்ட குழந்தை குறித்த விவரங்களையும் சேகரிக்க முயன்று வருகின்றனர். என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சந்திர கிரகணத்தின் போது 3 மாத குழந்தையை பலிகொடுத்த சம்பவம் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!