மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு முன்னேறியது இந்தியா... ஒப்புதல் வழங்கியது நிபுணர் குழு!!

By Narendran SFirst Published Dec 22, 2022, 6:06 PM IST
Highlights

தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் நிபுணர் குழு இந்தியாவின் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் நிபுணர் குழு இந்தியாவின் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் எழுச்சிக்கு மத்தியில், இந்தியா தடுப்பூசி இயக்கத்தை முடுக்கிவிட்டதால், தற்போது ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு முன்னேறியுள்ளது. தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் நிபுணர் குழு இன்று மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையும் படிங்க: சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு தடை இல்லை; ஏன்?

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சிறந்ததா?

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஊசி மருந்துகளுடன் ஒப்பிடும்போது பல நன்மைகளைக் கொண்டுள்ளன. சேமித்தல், விநியோகம் மற்றும் குறைவான கழிவு உற்பத்தி ஆகியவற்றைத் தவிர, மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வைரஸின் நுழைவிடங்களாம மூக்கு அல்லது மேல் சுவாசக் குழாயில் பாதுகாப்பை வழங்குகின்றன. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது உட்பட, கொரொனாவில் நம்மை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்ற மக்களைக் கேட்டுக்கொண்டதால், தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: களம்புகுந்தது கருடா படை ! அருணாச்சல்-சீனா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

டிசம்பர் 1 அன்று, இந்தியாவின் மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் அவசரகால சூழ்நிலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட கொரோனாவுக்கான உலகின் முதல் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தது. சீனாவும் உள்ளிழுக்கக்கூடிய தடுப்பூசி மற்றும் நாசி-ஸ்ப்ரே மருத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவும் ஈரானும் தங்கள் சொந்த மியூகோசல் தடுப்பு மருந்துகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளன. 

click me!