சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் உத்தரகாண்ட் மாநில பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்
உத்தரகாண்ட் மாநிலம் சாம்ப்வட் மாவட்டத்தை சேர்ந்த கமல் ராவத். பாஜக நிர்வாகியான கமல் ராவத், சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பாஜக நிர்வாகி கமல் ராவத் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.
சிறுமியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கமல் ராவத் தலைமறைவாகி விட்டார். இதனைத் தொடர்ந்து கமல் ராவத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
கைது செய்யப்பட்ட கமல் ராவத், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸ் அதிகாரி யோகேஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகியே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக அரசின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டுள்ள கமல் ராவத்தின் மீது, போக்சோ, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள அமைச்சருக்கு கத்தோலிக்க திருச்சபை கண்டனம்!
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவரது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் அப்போது பதிவு செய்ய முடியவில்லை. இதனிடையே, கமல் ராவத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் சாம்ப்வட் மாவட்டத் தலைவர் நிர்மல் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.