இந்தியா- பாகிஸ்தான் இடையே கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்.. பாக் சிறையில் வாடுபவர்களை விடுவிக்க கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 1, 2022, 2:26 PM IST
Highlights

தங்கள் நாட்டில் உள்ள சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தூதரகத்தின் வாயிலாக இன்று பரிமாறிக் கொண்டன.

தங்கள் நாட்டில் உள்ள சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தூதரகத்தின் வாயிலாக இன்று பரிமாறிக் கொண்டன.

இந்தியா பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் தங்கள் எல்லைகளுக்குள் அத்துமீறி வருபவர்களை கைது செய்து சிறைப் படுத்தி வருகின்றன. அதில் பொதுமக்கள், மீனவர்கள், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அடங்குவர். ஆனால் சில நேரங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் தெரியாமல் ஆவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கொடுமைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பு..??? நட்சத்திர ஓட்டலில் தடபுடல் ஏற்பாடு.. நாளை நடக்கப் போகும் டுவிஸ்ட்..

எனவே இவற்றை கலைய கடந்த 2008ஆம் ஆண்டு இரு நாட்டு தூதரகத்தின் வாயிலாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை இரு நாடுகளும் தங்கள் நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிறநாட்டு குடிமக்களின் விவரங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. 

இந்நிலையில்  பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  இந்தியர்கள், இந்திய மீனவர்கள், பாதுகாப்பு படை வீரர்களை அவர்களது உடைமைகளுடன் ஒப்படைக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அவர்களை முன்கூட்டிய விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.  சிறை தண்டனை முடித்தும் பாகிஸ்தான் சிறையில் வாடும் 536 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் காவலில் உள்ள இந்தியர்கள் என நம்பப்படும் மீதமுள்ள 105 மீனவர்கள் மற்றும் 20 சிவில் கைதிகளுக்கு உடனடியாக தூதரக அணுகலை வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை.. பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..

இதேபோல் இந்தியாவின் காவலில் உள்ள 309 பாகிஸ்தான் சிவில் கைதிகள் மற்றும் 95 பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் பட்டியலையும் இந்திய தூதரகம் வாயிலாக பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தனது காவலில் உள்ள  49 சிவில் கைதிகள், 633 மீனவர்களின் பட்டியலை இந்தியாவுடன் பகிர்ந்துள்ளது. அவர்கள் இந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரஸ்பர நாட்டிலுள்ள கைதிகள் மற்றும் மீனவர்கள் உட்பட அனைத்து மனிதாபிமான விஷயங்களுக்கும் முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கருத்தில்கொண்டு அனைத்து இந்திய மற்றும் இந்தியர்கள் என நம்பப்படும் இந்திய சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 

click me!