Maldives Ex Speaker Apology : பிரதமர் மோடிக்கும், இந்தியாவுக்கும் எதிராக மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் அந்த தீவின் முன்னாள் துணை சபாநாயகர் ஈவா அப்துல்லா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் அந்த அமைச்சர்களின் கருத்துகளை "வெட்கக்கேடானது மற்றும் இனவெறி கொண்டது" என்று அவர் முத்திரை குத்தினார். மேலும் முன்னாள் சபாநாயகர், இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டதுடன், மாலத்தீவுக்கு எதிரான புறக்கணிப்பு பிரச்சாரத்தை நிறுத்துமாறு இந்தியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பிரபல செய்தி நிறுவனத்திற்கு மாலத்தீவின் தற்போதைய எம்.பி ஒருவர் அளித்த தகவலில் "இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர்" என்று கூறியுள்ளார். கூறப்பட்ட கருத்துக்கள் மூர்க்கத்தனமானவை, இருப்பினும் கருத்துகள் மாலத்தீவு மக்களின் கருத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றார் அவர். அந்த அமைச்சர்களின் வெட்கக்கேடான கருத்துகளுக்காக இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு
மாலத்தீவு அமைச்சர்கள் சிலர், இந்தியாவையும் பிரதமர் மோடியையும் குறிவைத்து அவமானகரமான கருத்துக்களைப் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அண்மையில் லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி அவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது ஒரு ட்விட்டர் பயனர் வெளியிட்ட சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இனவெறி கருத்துக்களை மாலத்தீவை சேர்ந்த சில அமைச்சர்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவிற்கு ஆதரவாக பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டதோடு மாலத்தீவை புறக்கணிக்கும் கோஷங்களையும் எழுப்ப துவங்கினர்.
இந்நிலையில் மாலத்தீவின் பல அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் இந்த விஷயத்தில் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் சர்ச்சை கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை 9 ஏவுகணைகள் மூலம் மிரட்டிய பிரதமர் மோடி!