"அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சு.." - மோடியை கலாய்த்த ஈவிகேஎஸ்!!

 
Published : Jul 09, 2017, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சு.." - மோடியை கலாய்த்த ஈவிகேஎஸ்!!

சுருக்கம்

evks condemns modi

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த காங்கிரஸ் ஆட்சி முயன்றபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி எனது பிணத்தைத் தாண்டித்தான் வரியைக் கொண்டு வர முடியும் என்று சவால் விட்டார். ஆனால், தற்போது அவர் ஜி.எஸ்.டி. குறித்து பெருமை பேசி வருவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவை எதிர்த்துப் பேசினால் கம்பி எண்ண வேண்டி வரும் என்பதால் அதிமுகவினர், போட்டி போட்டுக் கொண்டு மோடியின் காலில் விழுகின்றனர் என்று தமிழக முன்னாள் காங். கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிககள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. காங். கட்சி அலுவலகமான ஜவகர் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மேலவை உறுப்பினர் சஞ்சத் தத் கலந்து கொண்டார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியால் ஏழை - எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

நெசவாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி வணிகர்கள் அனைவரும் தொழில் செய்ய முடியாமல் நடுரோட்டில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் சென்று போராடி இவர்களுக்கு உரிய நிவாரணம் தேடி தர வேண்டும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜி.எஸ்.டி. வரியை மக்கள் நலனுக்கு ஏற்ப வடிவமைத்து அதனை அமல்படுத்த முயன்றபோது குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திரமோடி எனது பிணத்தைத் தாண்டித்தான் வரியைக் கொண்டு வர முடியும் என்று சவால் விட்டார். தற்போது அவர் பெருமையாக பேசி வருகிறார்.

பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடுகிறார்கள். கதிராமங்கலத்தில் போராடிய பெண்கள் விவசாய பெருமக்களை கைது செய்து சிறைவைத்தது மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கொச்சைப்படுத்தி பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, புத்தகத்தில் மட்டும் தான் உள்ளது. நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை காரணமாக மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தி திணிப்பை கட்டாயம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் எனவும், தமிழ்மொழிக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்பட்டாலும் அதனை தடுத்து நிறுத்துவோம்.

பாஜகவை எதிர்த்துப் பேசினால் கம்பி எண்ண வேண்டி வரும் என்பதால் அதிமுகவினர், போட்டி போட்டுக் கொண்டு மோடியின் காலில் விழுகின்றனர்.

தமிழக மீனவர் பிரச்சனையில் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள சர்வாதிகார சட்டத்தை தடை செய்ய மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து மீனவர்களைக் காக்க வேண்டும் 

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!