sitharaman:trs:ரூ.100 லட்சம் கோடி கடன்!ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.1.25லட்சம் கடன்’: நிர்மலாவை விளாசிய டிஆர்எஸ்

Published : Sep 05, 2022, 12:10 PM IST
sitharaman:trs:ரூ.100 லட்சம் கோடி கடன்!ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.1.25லட்சம் கடன்’: நிர்மலாவை விளாசிய டிஆர்எஸ்

சுருக்கம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு இந்தியரின் தலையிலும் ரூ.1.25 லட்சம் கடன் இருக்கிறது என்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு இந்தியரின் தலையிலும் ரூ.1.25 லட்சம் கடன் இருக்கிறது என்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

தெலங்கானா மாவட்டம் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூர் நகரில் உள்ள ஒரு நியாயவிலைக்கடையில் கடந்த வாரம் திடீரென மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார். 

உலகின் மிகப்பெரிய ரமோன் மக்சேசே விருது தேவையில்லை.. சைலஜா டீச்சர் அதிரடி முடிவு.! ஏன் தெரியுமா ?

அப்போதுஅந்த ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டிலை நேரில் அழைத்த நிர்மலா சீதாராமன் மோடியின் படம் வைக்கப்படாதது ஏன் என்று கண்டித்தார். 

நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்பிஜி சமையல் சிலிண்டர் மீது சிலிண்டர் விலை ரூ.1,105 என எழுதப்பட்டதையும்,  பிரதமர் மோடியின் படத்தையும் ஒட்டி டிஆர்எஸ்கட்சியினர் பதிலடி கொடுத்து, கிண்டல் செய்தனர்.

இதனிடையே மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜகீராபாத் தொகுதியில் பயணம் மேற்கொண்டார். 
அப்போது அவர் பேசுகையில்  “ தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியின் ஆட்சியில் மாநிலத்தில் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.25லட்சம் கடன்இருக்கிறது. தெலங்கானா மாநிலம் பிரிக்கும்போது, உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டநிலையில் தற்போது பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது” என விமர்சித்தார்.

nirmala sitharaman: trs: சிலிண்டர் விலையும்! மோடி படமும்! நிர்மலா சீதாராமனுக்கு டிஆர்எஸ் கட்சி பதிலடி

இதற்கு பதிலடியாக டிஆர்எஸ் கட்சித் தலைவரும்மாநில தொழில் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான கே.டி.ராமா ராவ் பதிலடி கொடுத்துள்ளார். 

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மேடம், நிதிஅமைச்சர் நிதி மேலாண்மை பற்றி பேசுவதில் வல்லவர். 2014ம் ஆண்டுவரை கடந்த 67 ஆண்டுகளில் நாட்டில் 14 பிரதமர்க்ள் நாட்டை ஆண்டனர் அவர்களால் நாட்டுக்கு ரூ.56 லட்சம் கோடி கடன்தான் வந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடிஜி வந்தபின், கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் கடன் ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ஒவ்வொரு இந்தியரின் தலையிலும் ரூ.1.25 லட்சம் கடன் இருக்கிறது”  

தெலங்கானாவின் தனிமனித வருவாய் என்பது ரூ.2.78 லட்சமாகும். தேசியஅளவில் தனிமனித வருவாய் ரூ.1.46 லட்சம் இருக்கும்போது தெலங்கானாவில் அதிகம். தெலங்கானாவின் ஒட்டுமொத்த மாநில மொத்த உற்பத்தி(ஜிஎஸ்டிபி) 23.5%. 

மோடி படம் இல்லாத ரேஷன் கடை: நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

இது28 மாநிலங்களில் குறைவான கடன் வைத்துள்ளதில் 23வது இடத்தில் தெலங்கானா உள்ளது. நாட்டின் ஜிடிபியில் கடன் 59%. ரிசர்வ் வங்கி கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஜிடிபியில் 5% பங்களிப்பை தெலங்கானாவில் உள்ள 2.5% மக்கள் அளிக்கிறார்கள்” 
இவ்வாறு ராமா ராவ் தெரிவித்தார்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!