
இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருவர் என மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை
மும்பையை சேர்ந்த அர்ஜீன் பரத்வாஜ் என்ற 24 வயது மாணவர் (மேலாண்மை பிரிவு) நட்சத்திர ஓட்டல் ஒன்றின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக இவர் இதுகுறித்து சமூக வலைதளத்திலும் கருத்து பதிவிட்டு உள்ளார். அதீத மனஅழுத்தமே இவரின் தற்கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்து உள்ளது. உலகிலேலே மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதிகரிப்பு
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரப்படி 2015-ம் ஆண்டில் 8,934 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். மாணவர்கள் தன்னைத்தானே கொல்வதற்கு முக்கிய காரணமாக மனஅழுத்தம், தேர்வில் தோல்வி, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளன.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 14 சதவீதம், 1,230 (அதாவது 14 சதவீதம்) மாணவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் (955) உள்ளது. முறையே சத்தீஷ்கர் (625) உள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.
முடிவை மாற்றுவது எப்படி?
27 சதவீதம் பேர் வேலை இல்லையே என்ற ஏக்கத்தில் இந்த விபரீத முடிவை எடுக்கின்றனர். 87 சதவீதம் பேர் தீவிரமான மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதுகுறித்து மனோதத்துவ டாக்டர் ஒருவர் கூறும்போது, மனஅழுத்தத்தை குறைக்க குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதே சிறந்தது என்கிறார். மேலும் தற்கொலை எண்ணத்தை கைவிடவும் இது தூண்டுகோலாக இருக்கும் என குறிப்பிட்டார்.