வேகமாக அதிகரிக்கும் காற்று மாசு! - சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா!

By Dinesh TG  |  First Published Jun 8, 2022, 7:21 AM IST

அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் மிக மோசமான நிலையில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
 


கொலம்பிய மற்றும் யேல் பல்கலைக்கழகம் சார்பில் உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காற்று மாசு, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உமிழ்வு உள்ளிட்ட 11 பிரச்சனைகளை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப்படையில் ஒரு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

180 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 77.9 புள்ளிகளுகடன் டென்மார்க் முதலிடத்தையும், அமெரிக்கா 43வது இடத்தையும் பிடித்துள்ளது. 18.9 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசி 180வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில் பின்தங்கிய இடத்தையே பிடித்துள்ளன.


Tap to resize

Latest Videos

காற்று மாசு, அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதே நிலை தொடர்ந்தால் 2050ல் 50% அதிகமான கிரீன் ஹவுஸ் வாயு உமிழ்வை அந்நாடுகள் கொண்டிருக்கும் என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்! மத்திய அரசு கடிதம்.!

பாதுகாப்பான உணவே சிறப்பான ஆரோக்கியம்

click me!