al qaeda threat : நபிகள் மீது அவதாறு: இந்தியாவில் மனித வெடி குண்டு தாக்குதல் நடத்துவோம்: அல் கொய்தா மிரட்டல்

Published : Jun 08, 2022, 12:36 AM ISTUpdated : Jun 08, 2022, 12:58 AM IST
al qaeda threat : நபிகள் மீது அவதாறு: இந்தியாவில் மனித வெடி குண்டு தாக்குதல் நடத்துவோம்: அல் கொய்தா மிரட்டல்

சுருக்கம்

al qaeda threat to india:இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர்கள் நுபுர் ஷர்மா,நவீன் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அல்கொய்தா தீவிரவாதிகள், இ்ந்தியாவில் டெல்லி, மும்பை, குஜராத், உ.பி. மாநிலங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

al qaeda threat to india:இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர்கள் நுபுர் ஷர்மா,நவீன் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அல்கொய்தா தீவிரவாதிகள், இ்ந்தியாவில் டெல்லி, மும்பை, குஜராத், உ.பி. மாநிலங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் மரியாதைக்காகவும்,மாண்புக்காகவும் போராடுவோம் என்று அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்

அவதூறு கருத்து

பாஜக நிர்வாகி நுபர் ஷர்மா தொலைக்காட்சி விவாதத்திலும், மற்றொரு செய்தித்தொடர்பாளர் நவின் ஜிண்டால் ட்விட்டர் பதிவிலும் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தனர். 

பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு உலகெங்கும் உள்ள முஸ்லிம் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் கருத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பாஜக அவர்களை சஸ்பெண்ட் செய்தது. 

மத்திய அரசு வருத்தம்

மத்திய அரசு இருவரின் கருத்து மத்திய அரசின் கருத்து அல்ல அவர்களின் தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் உயர்ந்த மதிப்புடன் இந்திய அரசு அணுகுகிறது என்று விளக்கம் அளித்தது.

கண்டனம் எதிர்ப்பு

இந்தியாவிலிருந்து வெளியான இந்த சர்ச்சைக் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு இந்தியப் பொருட்களை கடைகளில் அகற்றவும் கோரிக்கை விடுத்தனர். அதுபோல் பல்வேறு நாடுகளிலும் இ்ந்தியப் பொருட்கள் கடைகளில் இருந்து அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அல்கொய்தா மிரட்டல்

இந்நிலையில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்காகவும், அவரின் மாண்பை காப்பாற்றுவதற்காகும் போராடுவோம், இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

 அல்கொய்தா தீவிரவாதிகள் விடுத்த மிரட்டல் கடிதத்தில் “ இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் மரியாதையைக் காப்பாற்ற போராடுவோம். டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப்பிரதேசத்தில் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தவும் தயாராக இருகிக்கிறோம். காவி பயங்கரவாதிகள் டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப்பிரதேசத்தில் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

காவி பயங்கரவாதிகள் அடைக்கல் தேடி சொந்த நாட்டிலும் ராணுவ முகாம்களிலும் அடைக்கலமாக முடியாது. எங்களின் அன்புக்குரிய இறைத்தூதருக்காக நாங்கள் பழிவாங்காமல் இருந்தால், எங்களைப் பெற்றவர்கள் எங்கள இழந்து தவிக்கட்டும்.

இறைத்தூதர் முகமது நபியை அவமதிப்பு செய்பவர்கள் கொல்லப்படுவார்கள். எங்கள் இறைத்தூதரை அவமதிப்பு செய்தவர்களை நோக்கி நாங்களும், எங்கள் குழந்தைகளும் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தாக்குதல்நடத்துவோம். யாருக்கும் இரக்கமும், கருணையும்கிடையாது. எந்தவிதமான பாதுகாப்பும் அவர்களை பாதுகாக்க முடியாது. எந்தவிதமான வருத்தமும், கண்டனத்தையும் தெரிவித்ததுடன் இந்த விவகாரம் முடிந்துவிடாது . 

இந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளனர். எங்கள் இறைத்தூதர் மாண்புக்காகப் போராடுவோம். இறைத்தூதர் மாண்பைக் காப்பற்ற மற்றவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, உயிர்துறக்க வேண்டுகிறோம். 
இ்வ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!