ஒருவரின் தவறுக்கு ஒட்டுமொத்த மாநிலமும் காரணம் ஆகாது... பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கருத்து!!

Published : Mar 05, 2023, 10:21 PM ISTUpdated : Mar 05, 2023, 10:22 PM IST
ஒருவரின் தவறுக்கு ஒட்டுமொத்த மாநிலமும் காரணம் ஆகாது... பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கருத்து!!

சுருக்கம்

பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த தமிழகத்துக்கு அதிகாரிகள் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த தமிழகத்துக்கு அதிகாரிகள் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீஹார் மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம், ஒருவரின் தவறுக்கு ஒட்டுமொத்த மாநிலமே காரணம் அல்ல. பீஹார் மாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

இதையும் படிங்க: அடக்கி வாசிக்கும் வாரிசு.! டெல்லி அரசியல் ஆசையில் தலைவர் - அரசியல் கிசுகிசு

தொழிலாளர்கள் தாக்கப்படுவதை தமிழக மற்றும் பீஹார் அரசும் பொறுத்து கொள்ளாது. பீஹார் பாஜக தலைவரை தொடர்பு கொண்ட தமிழக பாஜக தலைவர், தமிழகத்தில் பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை எனக்கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உண்மையை கண்டறிய தமிழகத்திற்கு அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உண்மை வெளிவந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.? பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் எழுதிய கடிதம் - நடந்தது என்ன.?

பிற மாநில தொழிலாளர்களுக்காக தமிழகத்தில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக டிஜிபியின் அறிக்கையின் பேரில் பேசியுள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் வெளியில் வந்தால், அங்குள்ள அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!