இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.? பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் எழுதிய கடிதம் - நடந்தது என்ன.?

Published : Mar 05, 2023, 08:39 PM IST
இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.? பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் எழுதிய கடிதம் - நடந்தது என்ன.?

சுருக்கம்

சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சியை சேர்ந்த 9 தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெல்லியில் மாநிலத்தில் புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, இந்தியா தற்போதுவரை ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, நாடு ஜனநாகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறவிட்டதையே காட்டுகிறது. மணிஷ் சிசோதியா மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது. டெல்லி கல்வித் துறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் மணிஷ் சிசோதியா. அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே உலகம் பார்க்கிறது.

பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயக மதிப்பீடுகள் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதாகவே உலகம் சந்தேகிக்கிறது.மத்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவில் சேர்ந்ததும் அவர்களுக்கு எதிரான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மென்மையாகக் கையாளுகின்றன. இதற்கு தற்போதைய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மேவே உதாரணம்.

இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!

கடந்த 2015ல் அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு அவருக்கு எதிராக விசாரணை அமைப்புகள் கடுமை காட்டவில்லை. இதேபோல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக செயல்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பை அவர்கள் திட்டமிட்ட ரீதியில் சீர்குலைக்க முயல்கிறார்கள்.

தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, டெல்லி மாநில ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கையே கொண்டிருக்கிறார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதன் காரணமாக, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!
என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்து கொடுக்கும் பிரதமர் மோடி!