ஏப்.21 இந்தியா வருகிறார் இங்கிலாந்த் பிரதமர் போரிஸ் ஜான்சன்... ஏப்.22ல் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!

Published : Apr 17, 2022, 09:30 PM IST
ஏப்.21 இந்தியா வருகிறார் இங்கிலாந்த் பிரதமர் போரிஸ் ஜான்சன்... ஏப்.22ல் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!

சுருக்கம்

இரண்டு நாள் பயணமாக வரும் 21 ஆம் தேதி இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 22 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். 

இரண்டு நாள் பயணமாக வரும் 21 ஆம் தேதி இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 22 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 22 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்தியில், வரும் 21 ஆம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார்.

அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார். இங்கிலாந்து பிரதமர் ஒருவர் குஜராத்துக்கு வருவது இதுவே முதல் முறை. குஜராத்தில் அறிவியல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களையும், இந்தியாவில் முக்கிய தொழில்களில் முதலீடுகள் குறித்த அறிவிப்பை  போரிஸ் ஜான்சன் அறிவிப்பார். அதை தொடர்ந்து அடுத்த நாள் 22 ஆம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கிறார். இரு தலைவர்களும் பாதுகாப்பு, ராஜதந்திர மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள்.

அப்போது இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறிவித்து ஆலோசிக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 2035 ஆம் ஆண்டுக்குள் ஆண்டு தோறும் 28 பில்லியன் பவுண்டுகள் அளவு உயர்த்த திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக போரிஸ் ஜான்சன் வெளியிட்ட பதிவில், எனது இந்தியப் பயணத்தின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரை மிகவும் முக்கியமான விஷயங்கள் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்துள்ளார். போரிஸ் ஜான்சன் இங்கிலாந்த் பிரதமரான பிறகு இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!