அதிகரிக்கும் கொரோனா..ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. ஒரு நாளில் 4 பேர் பலி..

Published : Apr 17, 2022, 11:24 AM IST
அதிகரிக்கும் கொரோனா..ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. ஒரு நாளில் 4 பேர் பலி..

சுருக்கம்

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த  இரண்டு நாள்களாக ஆயிரத்துக்கும்கீழ் குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 975 ஆக இருந்த நிலையில் இன்று 1150 ஆக பதிவாகியுள்ளது. 

இன்று ஒரே நாளில் 954 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 4,25,08,788 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பினால் இதுவரை உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 5,21,751 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 11,558 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாட்டில் இதுவரை 12,56,533 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 186 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?