அன்னாசி பழத்தில் வெடி வைக்கவில்லை..! கர்ப்பிணி யானை மரணம் குறித்து வெளியான பகீர் தகவல்!

By manimegalai aFirst Published Jun 7, 2020, 8:23 PM IST
Highlights

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து, பசிக்காக உணவு தேடி ஊருக்குள் வந்த கர்ப்பிணி யானைக்கு, சில கொடூரர்கள், அன்னாசி பழத்தில் வெடி மருந்து கொடுத்து அதன் இறப்பிற்கு காரணமான தகவல் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து, பசிக்காக உணவு தேடி ஊருக்குள் வந்த கர்ப்பிணி யானைக்கு, சில கொடூரர்கள், அன்னாசி பழத்தில் வெடி மருந்து கொடுத்து அதன் இறப்பிற்கு காரணமான தகவல் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. மனிதர்களின் மனிதநேயம் எங்கே சென்றது என்கிற கேள்வியையும் எழ வைத்தது.

இந்நிலையில், இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, இரண்டு வாரங்கள் உணவு சாப்பிடமுடியாமல், தண்ணீரில் நின்றபடி உயிர் விட்ட கர்ப்பிணி யானையின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் என பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் என அனைவரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்த வகையில், 40 வயது மதிக்க தக்க ஒருவரை வெடி மருந்து விநியோகம் செய்ததற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.  

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அன்னாசி பழத்தில் வெடி மருந்து நிரப்பி கொடுக்க வில்லை என்றும், மாறாக தேங்காயில் தான் வெடி மருந்து வைத்து கொடுத்ததாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

விவசாய நிலங்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்தும் என்பதற்காக சிறிய அளவிலான நாட்டு வெடிகள் வெடித்து அவற்றை விரட்டுவது வழக்கம். ஆனால் இவர்களின் செயல் ஒரு கருவுற்ற யானையை கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைமற்ற சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!