இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும்? அறிஞர்கள் கூறிய பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 4:33 PM IST
Highlights

இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பல மடங்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது  பாதிப்பு 2,46,628ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினைபின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ்தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், தொற்று மற்றும் குணமடைதல் என்னும் இரண்டு கூறுகளும் உட்படுத்தி, பெருந்தொற்றின் முழு அளவையும், பரவலான தன்மையையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

'தொடரும் தொற்று' என்னும் மாதிரியில் அடிப்படையில் இந்த மாதிரி ஆய்வு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது குணமடைந்தோ அல்லது இறந்தோ போகும்வரை பாதிக்கப்பட்ட நபர் தொற்றை மற்றவர்களுக்கு பரப்புகிறார். பாதிக்கப்பட்ட விகிதம் மற்றும் குணமடைந்தவர்களின் விகிதம் ஆகிய இரண்டுக்கு இடையிலான ரிக்ரெஷன் பகுப்பாய்வும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு ஒரு கருவியாக இருக்கும் என்றும், தனிமைப்படுத்துதல், பெருந்தொற்று மேலாண்மை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டால் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கான வரம்புகளையும் குறிப்பிடும் நோக்கில், இது மிகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைத்த தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!