தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க முழு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாடன முழுமையான விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கிய முழுமையான விவரங்கள் அடங்கிய அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
மார்ச் 14 அன்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் நன்கொடையாளர்களின் பெயர்கள், அவர்கள் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு, வாங்கப்பட்ட தேதிகள், அரசியல் கட்சிகளின் பெயர்கள், அவை பணமாக்கிய பத்திரங்கள் மற்றும் அவற்றின் மதிப்பு ஆகிய தகவல்கள் இருந்தன.
நன்கொடையாளர்களை கட்சிகளுடன் பொருத்திப் பார்க்க உதவும் சீரியல் நம்பர்கள் அதில் காணப்படவில்லை. தேர்தல் பத்திரங்களில் வெளிப்படையாகத் தெரியாதபடி மறைத்து அச்சிடப்படும் இந்த சீரியல் எண்களை வெளியிடாதது குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
டெல்லி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு!
மேலும், இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது. அதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது. கார்ப்பரேட் நன்கொடைகள் மூலம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் பெறப்படும் நிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்த நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறியது.
தேர்தலில் வாக்களிப்பது குறித்து முடிவு செய்ய, அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்வது யார் என்பதைப் பற்றிய தகவல்கள் வாக்காளர்களுக்குத் தெரிந்திருப்பது அவசியம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் கூறியது.
தமிழக பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை, தமிழிசை போட்டி