Chhattisgarh Election 2023 : மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது வெற்றியின் பாதி வழியைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று டிசம்பர் 3ம் தேதி வெளியாகியுள்ள 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி, மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து, ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்துள்ளது என்று தான் கூறவேண்டும். சத்தீஸ்கரில் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பாஜக இப்பொது 55 இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகின்றது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பாதையின் பாதியை கடந்துள்ளது. ஆனால், தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றியின் பாதியை தாண்டியுள்ளது. பழங்குடியின வாக்காளர்களின் ஆதரவை இழந்ததும் காங்கிரஸின் மோசமான செயல்பாட்டிற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் கூட பழங்குடியின வாக்காளர்களின் வீழ்ச்சியை காங்கிரஸ் எதிர்கொள்கிறது.
undefined
டிச.,6ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் 72 இடங்களுக்கு எதிராக பாஜக 155 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில், காங்கிரஸின் 70க்கு எதிராக, பா.ஜ.க பாதி அளவை தாண்டியுள்ளது. அதே போல சத்தீஸ்கரில், காங்கிரசின் 34 இடங்களுக்கு எதிராக, பாஜக 54 இடங்களுடன் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், தெலுங்கானாவில், முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் (கேசிஆர்) பாரத் ராஷ்டிர சமிதியை (பிஆர்எஸ்) காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி 69 இடங்களிலும், பிஆர்எஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது.