விரைவில் மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக, இந்தியத் தேர்தல் ஆணைய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக்கொண்டுள்ளார்.
2027ஆம் ஆண்டு ஆண்டு வரை அவரது பதவிக்காலம் உள்ளன நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே தேர்தல் ஆணையர் பதவிக்கு ஒரு காலியிடம் இருந்த நிலையில், அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் நீடிக்கிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 இடங்கள்! தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!
மக்களவைத் தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், மேலும் ஒரு தேர்தல் ஆணையம் பதவி விலகியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அருண் கோயல் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார். மத்திய அரசு அவரைப் பதவி விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமாவுக்கு உடல்நிலையும் ஒரு காரணம் என தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அருண் கோயல், 1985-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2022ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஒய்வு பெற்ற ஒரு நாள் கழித்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்றவரை உடனடியாக தேர்தல் ஆணையராக நியமிக்க அப்படி என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியது.
மூணு மாசத்துல 40 பில்லியன் டாலர் நஷ்டம்! அசால்ட்டாக இருந்து கோட்டை விட்ட எலான் மஸ்க்!