வாயால் வந்த வினை... மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Asianet News Tamil  
Published : Feb 07, 2017, 09:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
வாயால் வந்த வினை... மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சுருக்கம்

கோவா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கோவா சட்டசபை தேர்தலில், அந்த மாநில ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது சிம்பல் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, யார் 2 ஆயிரம் ரூபாய் தந்தாலும் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாரதீய ஜனதா வேட்பாளருக்கே ஓட்டு போடுங்கள் என்று கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு விளக்கம் அளித்த பாரிக்கர், கொங்கணி மொழியில் தான் பேசியதாகவும், அது புரியாமல் தவறாக மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

பாரிக்கரின் இத்தகைய பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மனோகர் பாரிக்கரின் பேச்சு சி.டி.யை 3 உறுப்பினர் குழு மீண்டும் மொழி பெயர்த்துள்ளதாகவும் பேச்சு திரிக்கப்படவில்லை, சரியாகவே உள்ளது என கூறி இப்போது புதிதாக மீண்டும் ஒரு நோட்டீசை மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது. இதற்கான விளக்கத்தை அவர்  வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!
Scholarship : மாணவர்களுக்கு ₹12,000 தரும் மத்திய அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?