
காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இவற்றை விசாரிக்க அரசியல் சட்ட ரீதியாக உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என, கடந்த ஆண்டு டிசம்பர், 9ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்த வழக்கு உச்சமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வா ராய், கான்வில்கார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மார்ச் 21ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளது.