சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல்… உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு!

Published : Dec 28, 2022, 11:11 PM IST
சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல்… உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  நிதியுதவி அறிவிப்பு!

சுருக்கம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: வெஜ் பிரியாணியில் எலும்பு.. ஆர்டர் செய்த வாடிக்கையாளர் அதிர்ச்சி - கடைசியில் காத்திருந்த சம்பவம்

இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தை பாதியில் நிறுத்திய சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.

இதையும் படிங்க: தாய் பாசத்தில் உருகும் ராகுல் காந்தி: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்பு செலவை தெலுங்கு தேசம் கட்சி கவனித்துக்கொள்ளும் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!