அந்தரத்தில் தொங்கிய பேருந்து... 30 பயணிகள் அலறல்...!

Published : Dec 25, 2018, 11:10 AM IST
அந்தரத்தில் தொங்கிய பேருந்து... 30 பயணிகள் அலறல்...!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்து விலகி சென்ற பேருந்து அந்தரத்தில் தொடங்கியது. பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

ஜம்மு காஷ்மீரில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்து விலகி சென்ற பேருந்து அந்தரத்தில் தொடங்கியது. பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் இருந்து ஜம்மு நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது சாலை முழுவதும் படர்ந்திருந்த பனியின் காரணமாக டயர்கள் வழுக்கி சென்றன. இதனால் மலை உச்சியில் சாலையோரத்தில் உள்ள கைப்பிடி சுவர்களுக்கு இடையே சிக்கியபடி தொங்கிய நிலையில் இருந்தது. 

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்ற பயத்தில் பயணிகள் அலறினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பேருந்து பள்ளத்தாக்கில் விழாமல் சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து பேருந்தில் சிக்கிய 30 பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் 30  பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

PREV
click me!

Recommended Stories

ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்
மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!