டெல்லி வக்பு வாரியம் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி வக்பு வாரியத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான் அமலாக்கத்துறை இயக்குநரகம் முன்பு வியாழக்கிழமை ஆஜரானார்.
இதற்கிடையில், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மோடி அரசு ஆபரேஷன் லோட்டஸ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.
undefined
"அமனத்துல்லா கான் மீது ஆதாரமற்ற வழக்கை புனைந்து அவரை கைது செய்ய அமலாக்கத்துறை ஆயத்தம் செய்து வருகிறது. இந்த சர்வாதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும், நான் அவரது குடும்பத்தை சந்திக்க இருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ராஜெக்ட் நிம்பஸ்... இஸ்ரேலுக்கு எதிராகக் குரல் கொடுத்த கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்!
அமானத்துல்லா கான் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவர் டெல்லி வக்ஃப் வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதன் மூலம் ரொக்கமாக லஞ்சம் பெற்றதாகவும், அசையா சொத்துக்களை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது.
2018 முதல் 2022 வரை அமானத்துல்லா கான் வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தபோது, வாரியத்தில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடந்ததாகவும், சொத்துக்களை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுக்க அமானத்துல்லாவுக்கு தனிப்பட்ட ஆதாயங்கள் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறையின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமானத்துல்லா குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை பணமாகப் பெற்றதாகவும், இந்த ரொக்கத் தொகை டெல்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்கியதில் முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சொல்கிறது.
சோதனையின் போது டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட பல முக்கிய சான்றுகள் கைப்பற்றப்பட்டன எனவும் அவை ஆம் ஆத்மி தலைவர் மீதான பணமோசடி குற்றச்சாட்டை நிரூபிக்கின்றன என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.