அமலுக்கு வந்தது புதிய ஜி.எஸ்.டி.! 200 பொருட்களின் விலை குறைந்தது! அது என்னென்ன பொருட்கள்...! இதோ ஃபுல் லிஸ்ட்...

 
Published : Nov 15, 2017, 03:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
 அமலுக்கு வந்தது புதிய ஜி.எஸ்.டி.! 200 பொருட்களின் விலை குறைந்தது! அது என்னென்ன பொருட்கள்...! இதோ ஃபுல் லிஸ்ட்...

சுருக்கம்

Eating out over 200 other items to cost less from today

மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

இதையடுத்து, ஏ.சி.வசதி அல்லது ஏ.சி. அல்லாத ஓட்டலில் சாப்பிட்டால் 5 சதவீதம் சேவை வரி மட்டுமே இனி விதிக்கப்படும். மேலும், அன்றாடம் பயன்படுத்தும் 200க்கும் ேமற்பட்டபொருட்களின் வரியும் குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் குறைந்துள்ளது.

மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு நாடுமுழுவதும் ஒரே சீரான வரியாக சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதிஅமல்படுத்தியது.  வரிவிலக்கு, 5 சதவீதம், 12, 18, 28 ஆகிய 5 படிகளை கொண்ட வரி நிலைகள் இருந்தன. இதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்கள் சிறு, குறுந்தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் அதிக வரி இருந்தது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள், வர்த்தகர்கள், மக்கள் ஆகிய அனைத்து தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி.கவுன்சில் முடிவு செய்தது. கடந்த 10ந் தேதி அசாம்மாநிலம், கவுகாத்தி நகரில் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் 178 பொருட்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது. குறைக்கப்பட்ட வரி வீதங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஓட்டல்களுக்கு 5 சதவீத வரி

ஏ.சி. ஓட்டல், ஏ.சி அல்லாதஓட்டல்கள்களுக்கான சேவை வரியை 5 சதவீதமாக நிர்ணயித்தது.  இதற்கு முன் ஏ.சி. ஓட்டலில் சாப்பிடும் போது சேவை வரியாக 18 சதவீதமும், சாதாரண ஓட்டல்களில் சாப்பிட்டால் சேவை வரியாக 12 சதவீதமும் விதிக்கப்பட்டது. இதை நீக்கி, 5நட்சத்திர ஓட்டல்கள் தவிர அனைத்து ஓட்டல்களுக்கும் சீராக 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

18 சதவீதம்

மேலும், வயர், கேபில்,எலெக்ட்ரிக் பிளக், எலெக்ட்ரிக்போர்டு உள்ளிட்ட மின்னணு சாதனங்கள். கையால் செய்யப்பட்ட பர்னிச்சர்கள்,டிராவல் பேக், ஹேன்ட் பேக், சோப்பு, சலவை சோப்பு பவுடர், கைகழுவும் கிரீம், ஷாம்பு, தலைக்கு தேய்க்கும் கிரீம்,ஹேர் டை, ஷேவ் கிரீம், ஆப்டர்ஷேவ் லோஷன், பெர்பியூம்,டியோடரன்ட், காற்றாடி, அழகுசாதன பொருட்கள்,பேட்டரிகள், குளியலறையில் பயன்படுத்தப்படும் சானிட்டரிபொருட்கள், மார்பில், கிரனைட்,பிளாஸ்க், லைட்டர், கடிகாரங்கள், கியாஸ் ஸ்டவ்,குக்கர்கள், பிளேடுகள், அலுமினிய கதவுகள், அது தொடர்பான பொருடக்ள்,சிமென்ட், செராமிக் பொருட்கள், பைப்கள், சாக்லேட், சூயிங்கம்உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

12சதவீதமாக குறைக்கப்பட்டவை

மாவு அரைக்கும் கிரைண்டரில்பயன்படுத்தப்படும் கல், டாங்கிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பால், சுத்தப்படுத்தப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, சர்க்கரை நோயாளிகள் உணவுகள், மூங்கிலால் செய்யப்படும் பர்னிச்சர்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன.

5சதவீதம்

கடலைமிட்டாய், சுவைசேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், சட்னிபவுடர், சாம்பலில் தயாரிக்கப்பட்ட செங்கல்கள், இட்லி, தோசை மாவு, மீன் வலை,மீன்பிடி கொக்கி உள்ளிட்ட பொருட்கள்.

வரி நீக்கப்பட்டவை

கருவாடு, பதப்படுத்தப்படாத தேங்காய் உள்ளிட்ட பல பொருட்கள்.

PREV
click me!

Recommended Stories

தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்
வரிவிதிப்பு சிக்கல் முடிந்தது! இந்தியா-நியூசிலாந்து FTA-ஆல் ஏற்றுமதி-இறக்குமதி எளிதாகும்