Earthquake : உத்தரபிரதேசத்தில் நிலநடுக்கம்! - நேப்பாள், சீனா, டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு - மக்கள் பீதி

By Dinesh TGFirst Published Aug 20, 2022, 10:39 AM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோ அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேப்பாள் மற்றும் சீனா நாடுகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியைடந்தனர்.
 

லக்னோவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியில் 139 கிலோ மீட்டர் தொலைவில் 82 கிலோமீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.12am ஏற்றபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக உணர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பீதி நிலவியது.

26/11 போன்று மும்பையில் தாக்குதலா? மர்ம தொலைபேசி அழைப்பால் போலீசார் தீவிர விசாரணை

மேலும் இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள பகுதிகளான லகிம்பூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும், தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அதேபோல் நேப்பாளத்தின் சந்தோஶ்ரீ தரத்டால் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து எந்த பொருட்சேதமும், உயிர்தேசமும் ஏற்பட்டதாக ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.

click me!