கர்நாடகாவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்… பீதியில் தெறித்து ஓடிய மக்கள்

Published : Oct 10, 2021, 08:21 AM IST
கர்நாடகாவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்… பீதியில் தெறித்து ஓடிய மக்கள்

சுருக்கம்

கர்நாடகாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

கர்நாடகாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது குல்பர்கா. இங்கு இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து தெறித்து ஓடி இருக்கின்றனர்.

நிலநடுக்கம் காரணமாக பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 3.4 அலகுகளாக பதிவாகி உள்ளது. குறைந்த அளவேயான நில அதிர்வு என்பதால் பயப்பட வேண்டியது இல்லை என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

இருப்பினும் முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் ஏதேனும் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!