துபாய் டு இந்தியா பயணம்.. அதிரடி சலுகையை அறிவித்த எதிஹாட் ஏர்வேஸ் - இதுக்கு டாம் குரூஸ் தான் காரணமா?

By Ansgar R  |  First Published Jul 22, 2023, 6:35 PM IST

துபாயில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிஹாட் நிறுவனத்தின் இந்த சலுகை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் அண்மையில் அவருடைய மிஷின் இம்பாசிபிள் படத்தின் ஒரு பாகம் வெளியானது. இந்நிலையில் இதை முன்னிட்டு துபாயின் பிரபல விமான சேவை நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் "Impossible Deals" என்ற ஒரு சலுகையை தனது பயணிகளுக்கு அளித்துள்ளது. 

இதன்படி உலக அளவில் பல நாடுகளுக்கு துபாயில் இருந்து செல்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது அந்த நிறுவனம். அந்த வகையில் துபாயில் இருந்து இந்தியா செல்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 895Dh திர்ஹம்ஸ் (மும்பை செல்ல) முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 995 திர்ஹம்ஸ் என்று குறைந்தபட்ச கட்டணத்தில் மக்கள் துபாயில் இருந்து டெல்லி செல்லலாம். 

Tap to resize

Latest Videos

பன்னாட்டு சேவையை அதிகரிக்கும் இண்டிகோ.. இந்தியாவிலிருந்து இரு முக்கிய நாடுகளுக்கு இனி அதிக அளவில் Flight சேவை!

இந்த சலுகையைப் பெற விரும்பும் பயணிகள், செப்டம்பர் 10 முதல் டிசம்பர் 10, 2023 வரையிலான காலக்கட்டத்தில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், இந்தச் சலுகை வரும் ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எதிஹாட் ஏர்வேஸின் தலைமை வருவாய் அதிகாரி அரிக் டி பேசுகையில் “மிஷன் - இம்பாசிபிள் பட நிறுவனத்துடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த அருமையான சலுகைகளை எங்கள் மதிப்புமிக்க பயணிகளுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் அவர். 

துபாயில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில். மக்களின் தேவை அதிகமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நிச்சயம் எங்களுடைய Impossible Deals மூலம் உங்கள் பயணத்தை எளிதாக்குவோம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

விவேகானந்தா கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் ரகசிய சாட்சியாக மாறிய ஒய்.எஸ்.சர்மிளா

click me!