கேரள மாநிலம் மூணாறு அருகே நாயமக்காடு தேயிலை தோட்டப்பகுதியில் 10 பசுக்களை அடித்துக்கொன்ற புலியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறு அருகே நாயமக்காடு தேயிலை தோட்டப்பகுதியில் 10 பசுக்களை அடித்துக்கொன்ற புலியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ட்ரோன்களைப் பயன்படுத்தியும் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
undefined
கேடிஎச்பி நிறுவனத்துக்கு சொந்தமான நயமக்காடு எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மாட்டுக்கொட்டகையில் 10க்கும் மேற்பட்டபசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த வாரம் இந்தப் பகுதிக்கு வந்த புலி ஒன்று பசுக்களை அடித்துக் கொன்றது.
அவரு பாஜகவுக்காக வேலை பார்க்கிறாரு ! பிரசாந்த் கிஷோரை கலாய்த்த நிதிஷ் கட்சி
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகாலை வேலைக்குச் செல்வதை நோட்டமிட்ட புலி அதன்பின் வந்து பசுக்களை அடித்துக் கொன்றது. இதுவரை 10 பசுக்கள் வரை புலி கொன்றுவிட்டதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.
பசுக்களை கொன்ற புலி குறித்து பலமுறை வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் அந்த புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மூணாறு-உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று தொழிலாளர்கள் மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு பேச்சு நடத்தி, புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பின்பு, தொழிலாளர்கள் மறியல் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்.
புலியைப் பிடிக்க வனத்துறையினர் 3 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உயரமான இடங்களில் வனக் காவலர்களையும், ட்ரோன்களையும் வனத்துறையினர் பயன்படுத்தியுள்ளனர்.
சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ புலியைப் பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்துவிட்டோம். ஆனால், புலி சிக்கவி்ல்லை. அந்த கூண்டுக்கு அருகே புலி வந்து சென்றதா என்பது குறித்து ஆய்வு செய்வோம்.
அந்த கூண்டுக்குள் மாமிசத்தையும் வைத்துள்ளோம். தொழிலாளர்கள் அதிகாலையில் வேலைக்குச் சென்றுவிடுவதால், குடியிருப்புப் பகுதியைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளோம். ரவிகுள் தேசியப் பூங்காவில் இருக்கும் சிறுத்தை, புலிகளின் இனப்பெருக்க காலம் இதுவென்பதால், சிறுத்தை, புலி அதிகளவில் மக்கள் நடமாடும் பகுதிக்கு வருகிறது. புலி எப்போது பிடிபடும் என காலக்கெடு கூற முடியாது.
ஆனால் கூண்டு வைத்துள்ளோம். புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டை மாற்றுவோம். புலியை பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட குழுவினர் இருபிரிவுகளாக கண்காணித்து வருகிறார்கள் ” எனத் தெரிவித்தார்
நயமக்காடு எஸ்டேட் பகுதிக்குள் 2 கிலோ சுற்றளவில் புலி சுற்றி வருவதால், எஸ்டேட் பகுதியில் வேலைக்குச் செல்லவே தொழிலாளர்கள் அஞ்சுகிறார்கள். ஏற்கெனவே கால்நடைகளை அடித்துக்கொன்று ரத்தவெறியுடன் இருக்கும் புலி, மனிதர்களைத் தாக்கலாம் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரஅஞ்சுகிறார்கள். பசுக்களைக் கொன்ற புலிக்கு இழப்பீடாக ரூ.35 ஆயிரத்தை உரிமையாளர்களிடம் வனத்துறையினர் முதல்கட்டமாக வழங்கியுள்ளனர்.